Tags

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், "ஆக்ஸிஸ் வங்கி - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு மற்றும் திறம் மிக்க வாணிபத்தை மேற்கொள்வது பற்றிய கருத்தரங்கு" கடந்த 13-02-2019, புதன் கிழமை அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.

"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான" விழிப்புணர்வு கருத்தரங்கு M/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ் அவர்களால் கடந்த 28-12-2018, வெள்ளி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க  அரங்கில்  நடைபெற்றது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஆற்றல் மேம்பாட்டு பிரிவு (BEE) இணைந்து கடந்த 27-12-2018, வியாழன் அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க  அரங்கில்  நடைபெற்றது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் உலகளாவிய கணக்கு (UAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து சிறப்பு கூட்டம்,  கடந்த வெள்ளி கிழமை (14-12-2018)  அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.

மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்  கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார். 

தொழிற்சாலைகளின் முன்னேற்றம் மற்றும் தொழில் இயந்திரவியலின் திறன்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கு  கடந்த வெள்ளி கிழமை (21-12-2018)  அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.