திருப்பூர் மாநகராட்சியில் பெண்கள் அதிகம் படிக்கும் "ஜெய் வாபாய்" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.
இதை புதுப்பிப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எஸ்.ஆர்.ஜி மற்றும் பிரைம் டெக்ஸ் பனியன் நிறுவனத்தின் இயக்குனருமான திரு.கோவிந்தராஜ் அவர்கள் ரூபாய் 14 லட்சம் (CSR பண்ட் ) நன்கொடை வழங்கி கட்டுமான பணிகள் நடக்க உதவினார். இந்த கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது. டீ பவுண்டேசன் இதற்கு உறுதுணையாக இருந்தது.
இன்று (3.10.2018) நடந்த விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதின் தலைவர் திரு. ராஜா எம்.சண்முகம், துணை தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.ஜி கோவிந்தராஜ், டீ பவுண்டேஷன் துணைத்தலைவர் திரு. ராகம் முருகேசன், டீ உறுப்பினர் திரு.தங்கமுத்து (ADSP ஓய்வு ) , திரு.பாலசுப்ரமணியம் மகேஷ்குமார் மில்ஸ், திரு.பொன்முத்து மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டனர்,
பள்ளியின் முதல்வர் திருமதி ஸ்டெல்லா மேரி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற தேர்வானவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வெற்றி பெற வாழ்த்தினர்.
இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கேஜி .பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.