President's Message
K. M. Subramanian
பிரதி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாடு மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த மார்ச் 30 அன்று மேற்படி உரையாடலில் திருப்பூர் ஜவுளித்துறையை குறிப்பிட்டு பேசினார் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகளில் உருவாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மறு உபயோகம் செய்வதிலும் , மரபு சாரா மின் உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளதாக மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கடந்த மாதம் புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சிக்கு வருகை புரிந்த மாண்புமிகு பாரத பிரதமரிடம் நமது சங்கத்தின் கௌரவ தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஆ. சக்திவேல் அண்ணா அவர்கள் திருப்பூரின் வளம்குன்றா உற்பத்தி திறனை, பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு, மரப சாரா மின்னுற்பத்தி, 23 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பலவேறு முயற்சிகளை பற்றி எடுத்து கூறினார். அனைத்து விவரங்களையும் மிக கவனமாக கேட்டறிந்த நமது மாண்புமிகு பிரதமர் அதைப்பற்றி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பெருமையுடன் எடுத்துக்கூறினார்.
இந்தியாவில் உள்ள 74 ஜவுளி கிளஸ்டர்களில் திருப்பூர் வளம்குன்றா உற்பத்தியில் முன்னணியில் உள்ளதோடு அனைத்து மையங்களுக்கு மட்டுமல்ல உலகளவில் ஜவுளி உற்பத்தி கிளஸ்டர்களுக்கு எடுத்துகாட்டாக திகழ்வது நமக்கெல்லாம் பெருமிதமே
திருப்பூரை பற்றி தனது மனதின் குரலில் பெருமையுடன் பதிவு செய்த நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரிடத்தில் திருப்பூரின் வளம்குன்றா உற்பத்தி வலிமையை எடுத்து கூறிய நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதின் நிறுவனரும் கௌரவ தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் ஆ.சக்திவேல் அண்ணா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
நன்றி! நன்றி! நன்றி!