நமது பாரதப் பிரதமர், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உண்மையான திட்டமான “தூய்மை இந்தியா” திட்டம் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு “தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்தல் என்ற முறையில் செயல் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுனங்களிலும், வீடுகளிலும், காடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தானே இத்திட்டத்தை செயல்பாட்டில் கொண்டு வந்துகொண்டுள்ளனர்.
அதே போல நேற்று ( செப்டம்பர் 20 ) மாலை 5 மணியளவில் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் " தூய்மை பாரதம் " நிகழ்ச்சியை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் அவர்கள்
துவக்கி வைத்து பேசியதாவது ,
நமது முன்னோர்கள் சுத்தம் சோறு போடும் என்று கூறினார்கள், அதனால் நமது தொழில் நிறுவனங்களை அனைவரும் தினமும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நம்மை சார்ந்தவர்களையும் வலியுறுத்த வேண்டும் . என்று பேசினார்
மேலும் இந்நிகழ்ச்சிக்கு துணை தலைவர்கள் திரு.மைக்கோ வேலுச்சாமி, திரு.ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, பொதுச்செயலாளர் திரு.டி .ஆர். விஜயகுமார், பொருளாளர் திரு.மோகன், உறுப்பினர் கமிட்டி சேர்மன் திரு.செந்தில்குமார் உட்பட ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.