Tags

ஆண்டுக்கு 777 ரூபாய் செலுத்தி, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ வசதி பெறும், சிறப்பு காப்பீடு திட்டத்தை, நமது ஏற்றுமதியாளர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆடை வர்த்தக வளர்ச் சிக்கான திட்டங்களோடு, தொழில் துறைக்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதிலும், நமது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அக்கறை காட்டி வருகிறது.

வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த, ஆறு லட்சம் தொழிலாளர்கள், திருப்பூர் பின்னலாடை துறையில் பணியாற்றுகின்றனர். பனியன் தொழி லாளர்களின் அவசர கால மருத்துவ தேவைகளுக்கு பயனளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, புதிய மருத்துவ காப்பீடு திட் டத்தை ஏற்றுமதியாளர் சங்கம் அறிமுகப்படுத் தியது.

இதில், 365 ரூபாய் செலுத்தி, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு வழங்கும் இந்த திட்டத்தில், தொழிலாளர் ஆயிரம் பேர் இணைந்தனர். ஆனால், இந்த திட்டத்தில், சில நோய்களுக்கான சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், சங்க ஆலோசகர் ஆடிட்டர் ராமநாதனின் ஆலோச னைப்படி, மருத்துவ காப்பீடு திட்டம் தற்போது, சீரமைக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, 'எடல்வைஸ்' காப்பீடு திட்ட நிறுவனம், விடல் நிறுவனம், இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளையுடன், ஏற்றுமதியாளர் சங்கம், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

'மெடி பிளஸ்-365' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய காப்பீடு திட்டத் தில், 777 ரூபாய் காப்பீடு தொகை செலுத்தினால்போதும்; ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் பெறலாம். நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு, 1,600 ரூபாய் காப்பீடு செலுத்தினால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத் துவ சிகிச்சை பெறலாம்.

காப்பீடு திட்டத்தில் இணைந்த நாள் முதலே சிகிச்சை பெற முடியும்; காப்பீடு பெற்று, ஒன்பது மாதம் நிறைவடைந்த பின், மகப்பேறு சிகிச்சை பெற முடியும். புற நோயாளி பிரிவில் சிகிச் சை பெறமுடியாது. உள் நோயாளிகளாக, 527 வகை யான நோய்கள், அறுவை சிகிச்சைகளுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும், 50 மருத்துவ மனைகளில் மட்டும் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் முழு பயன் பெறும் வகையில், திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; பிற பகுதி மருத்துவ மனைகளில், இந்த திட்டத்தில் சிகிச்சை பெற சில விதிமுறைகள் உள்ளன. மருத்துவமனைகளுடன் பேசி, பிற பகுதிகளிலும், இந்த திட்டத்தில் தொழி லாளர்கள் முழுமையான மருத்துவ வசதி பெறுவதற் கான முயற்சி மேற்கொள்ள உள்ளனர்.

ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜய குமார் கூறுகையில், ''மருத் துவ காப்பீடு திட்டம், சீர மைக்கப்பட்டு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்கள், தொழி லாளர் குடும்பத் தினரை, இந்த திட்டத்தில் இணைக்கவேண்டும். இதுவரை, இரண்டாயிரம் தொழிலாளர்களை இணைப்பதற்கான விண் ணப்பங்கள் வந்துள்ளன.மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தில், முதல் கட்டமாக 2 லட்சம் தொழி லாளரை இணைக்க திட்ட மிட்டுள்ளோம்,'' என்றார்.

ஆடிட்டர் ராமநாதன் கூறுகையில், 


''இ .எஸ்.ஐ.,ல், விபத்து கால சிகிச்சைகள் பெறுவது சிரமம். நமது சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த காப்பீடு திட்டத்தில், அனைத்துவகை நோய்கள், அவசர சிகிச்சைகள் பெறமுடியும். ''பின்னலாடை துறை சார்ந்த அனைத்து சங்கங் களும், தங்களிடம் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள், தொழிலாளர்களை மருத்துவ காப்பீடு திட் டத்தில் இணைக்க அறிவுறுத்தவேண்டும்,'' என்றார்.

'காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை இணைக்க விரும்பும் நிறுவனங்கள், 98435 23313, 89398 62582 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என ஏற்றுமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

e-max.it: your social media marketing partner