வங்கி கடன் கிடைக்காதவர்கள் NSIC ன், வாயிலாக, மிக எளிதாக கடன் வசதி பெறலாம்.
தேசிய சிறு நிறுவன கழகத்தில் என்.எஸ்.ஐ.சி., கடன் பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் திரு.ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் திரு. மைக்கோ வேலுசாமி, பொது செயலாளர்
திரு.விஜயகுமார் முன்னிலை வகித்தனர்,
என்.எஸ்.ஐ.சி., சென்னை மண்டல பொதுமேலாளர் திரு. வித்யாசாகர் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
* திருப்பூர் தொழில் துறையினர், ஆடை தாயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இத்துறையை சார்ந்த மற்றும் சிறு, குறு நிறுவனங்கள், என்.எஸ்.ஐ.சி., யில் மிக எளிதாக கடன் பெறமுடியும்.
* ரயில்வே, மருத்துவம் போன்ற பல்வேறுவகை அரசு துறைகளுக்கான சீருடை தயாரிப்புகளுக்கு டென்டர்கள் அறிவிக்கப்படும்.
* தேசிய சிறு, நிறுவன கழகத்தின் தளத்தில், அரசு தரப்பில் அறிவிக்கப்படும் அனைத்து டென்டர் விவரங்களும் வெளியிடப்படும். இதை பயன்படுத்தி, சிறு, குறு நிறுவனங்கள் அரசு துறை சார்ந்த ஆர்டர்களை எளிதாக பெறமுடியும்.
*வர்த்தக மேம்பாட்டுக்காக, உள்நாடு, வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகள்; உற்பத்தியாளர் - வர்த்தகர் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்பது அவசியம்.
இதுபோன்ற தேவைகளுக்கும், மானியங்கள் பெறமுடியும். நேரடியாக வங்கிகளை அணுகுவதைவிடவும், என்.எஸ்.ஐ.சி., வாயிலாக அணுகும்போது, எளிதாக கடன் பெறலாம்.
* எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், பெண் தொழில் முனைவோருக்கு என, தனித்துவம் மிக்க கடன் வசதிகள் உள்ளன.
*என்.எஸ்.ஐ.சி.,ன் கடன் திட்டங்கள், மானியங்களை தெரிந்து, அவற்றை பயன்படுத்தி, பலன் பெறவேண்டும்.