Tags


'திருப்பூரில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றுகின்றனர்,' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், கருத்து தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்,

திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்நலன், சுகாதாரம் மற்ற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருந்தரங்கு, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. துணை தலைவர் ராஜ்குமார், நெறிமுறை வர்த்தக குழு பிரதிநிதி அருணா முன்னிலை வகித்தார்.

 

தொழிற்சங்க பிரதிநிதிகள் ரவி மற்றும் சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,), சம்பத் (சி.ஐ.டி.யு.,), பாலசுப்பிரமணி (எல்.பி.எப்.,), முத்துசாமி (ஹெச்.எம்.எஸ்.,), மாதவன் (பி.எம்.எஸ்.,), மனோகர் (டி.டி.எம்.எஸ்., ), சேவ் அமைப்பு சார்பில் வியாகுலமேரி, 'கேர்-டி' அமைப்பு பிரதிநிதி பிரிதிவ்ராஜ் உள்ளிட்டோர் பேசினார்.

 

தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்:

 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், திருப்பூரில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளரின் கோரிக்கைகள், குறைகள், முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகின்றன. பனியன் தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை, புலம்பெயர் தொழிலாளர் வாயிலாக நிவர்த்தி செய்யப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், திருப்பூரின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டனர்.

 

ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி:

 

திருப்பூரில், பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் என, அனைத்து இடங்களிலும், வடமாநில தொழிலாளர் கூடுதல் கவனத்துடன் நடத்தப்படுகின்றனர். அவர்களும், அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர். வடமாநில தொழிலாளர் தொழில் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக்காக, குறும்படமாக தயாரித்து, அவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படும். தொழிலாளர்களின் குழந்தைகளும், தடையின்றி கல்வி பயில உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கப்படும். வடமாநில தொழிலாளர், தமிழகத்தின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளை அறியவும், தொழில் குறித்த தகவல்களை பெறவும், புதிய வழிகாட்டி கேயேடு தயாரித்து, அந்தந்த மொழிகளில் அச்சிட்டு வழங்கப்படும்.

 

 

Published on: 04th July 2025

Source: Dinamalar

e-max.it: your social media marketing partner