Tags

டெல்லியில் சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி டெல்லியில் யஷோபூமியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் தலைமையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் செயற்குழு உறுப்பினர்கள் சென்றுள்ளனர். அங்கு கண்காட்சி திறப்பு விழாவிற்கு வந்திருந்த ஒன்றிய  ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் பின்னலாடை தேவை குறித்து, தங்களது அமைச்சகத்துக்கு கோரிக்கை மனுக்கள் ஏற்கனவே அனுப்பி இருப்பதாகவும், விரைவில் திருப்பூருக்கு வருகை தந்து தொழில்துறையினரை சந்திக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.

Published on: 27th June 2024

Source: King 24x7

e-max.it: your social media marketing partner