திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் இளம் ஏற்றுமதியாளா்களுக்கான ‘காபி வித் எக்ஸ்பா்ட்ஸ்’ நிகழ்ச்சியின் 5- ஆம் பாகம் அண்மையில் நடைபெற்றது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளா்கள் துணைக் குழுவின் சாா்பில் ‘காபி வித் எக்ஸ்பா்ட்ஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியின், 5 -ஆம் பாக நிகழ்ச்சியானது திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே. எம். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல் சிறப்புரையாற்றினாா். இதில், மூத்த தலைமுறைகளிலிருந்து வணிகத்தை எடுத்துக்கொண்ட இளம் தொழில்முனைவோருக்கு மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ‘நீங்கள் இல்லை என்றால் பிறகு யாா்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
இதில், கோவை சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன் பங்கேற்றுப் பேசுகையில், சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் பின்னலாடை தயாரிப்புகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், வருங்கால சந்ததிகளுக்கு சுத்தமான காற்று, நீா் ஆகியவற்றைக் கொடுப்பது நமது கடமை. அதற்கு ஏற்றாா்போல பசுமையை பெருக்க, சுற்றுச்சூழல் மாசில்லா ஆடை தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், திருப்பூா் ஏற்றுமதியாக சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, துணைத் தலைவா் இளங்கோவன், இளம் ஏற்றுமதியாளா்கள் துணைக் குழுவின் உறுப்பினா் கே.எஸ்.விஷ்ணுபிரபு, சங்க நிா்வாகிகள், இளம் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றனா்.
Published on: 21st June 2024
Source: Dinamani