Tags

திருப்பூர்:வட்டி சலுகை நீட்டிப்பு, பின்னலாடை தொழில்துறையினருக்கு பேரூதவியாக இருக்குமென, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிறு, குறு தொழில்கள் பட்டியலில் உள்ள, பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. வட்டி மானியம், வரிசலுகை என, தொடர்ந்து சலுகை வழங்கப்படுகிறது.அவ்வகையில், வட்டி உயர்வை சமன்படுத்தும் வகையில், வட்டி மானிய உதவி வழங்கப்படுகிறது.


இந்தசலுகை, மார்ச் 31ம் தேதியுடன் காலாவதியான நிலையில், மீண்டும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பால், பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், ''சரக்கு கப்பலில் ஏற்றுவதற்கு முன்னும், பின்னும், வட்டிநிலையை சமன்செய்யும் திட்டம் உதவியாக இருக்கிறது.இத்திட்டம், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு பேருதவியாக இருக்கும். கொரோனா ஊரடங்கு பாதிப்புகளை சமன்செய்ய, இத்தகைய சலுகை நீட்டிப்பு மிகவும் கைகொடுக்கும்,'' என்றார்.

Published On : 14-05-2021

 

Source : Dinamalar

e-max.it: your social media marketing partner