மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஜவுளித் துறையின் நிலையை அறிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து 11 ஜவுளித் துறை பிரதிநிதிகளுடன் தனது இல்லத்தில் சந்திப்புக்கு கடந்த 26.12.2019 அன்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திரு. ராஜா எம் சண்முகமும் கலந்துகொண்டார்.
அவர் நமது பின்னலாடையின் பெருமை பேசும் வகையில் "மேக் இன் இந்தியா" சின்னம் பொறிக்கப்பட்ட "டி-சர்ட்டை" மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திருப்பூரின் வளர்ச்சி, முக்கியத்துவம் மற்றும் ஆற்றல் ஆகியவைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். மேலும் Risky Exporters, BASEL விதிமுறைகளின் தாக்கம் மற்றும் RoSL நிலுவைத் தொகை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் எடுத்துரைத்தார்.