திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், "ஆக்ஸிஸ் வங்கி - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு மற்றும் திறம் மிக்க வாணிபத்தை மேற்கொள்வது பற்றிய கருத்தரங்கு" கடந்த 13-02-2019, புதன் கிழமை அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
இதில் திரு T.R. விஜயகுமார் (பொது செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்) அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.
திரு. R . கோவிந்தராஜூ, (தலைவர், வங்கி மற்றும் நிதி துணை குழு) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
திரு P.மோகன், (பொருளாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்) அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
திரு. V. சோமசேகர், (துணைத் தலைவர், ஆக்ஸிஸ் வங்கி, பெங்களூர்) அவர்கள் வெளிநாட்டு மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் தற்போதைய முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் பல்வேறு முதலீடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
திரு. ஜாட்டின் ஸ்ரீவஸ்தவா, (பங்குதாரர், சேத் அண்ட் அசோசியேட்ஸ், பட்டய கணக்காளர்கள், கோயம்புத்தூர்) அவர்கள் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் செயல் திறன் மிக்க நிலையை கண்டறிந்து அதற்கு மாற்றாக பல்வேறு முதலீடுகளை பயன்படுத்தி ஆபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.