Tags

திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தக மேம்பாடு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது.

வணிகத்துறை செயலர் சுனில் பர்த்வால் பேசியதாவது:

ஏற்றுமதி கட்டமைப்புகளில் நிலவும் சிக்கல்கள் முழுவதும் தீர்க்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும். பல்வகை காரணங்களால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்முனைவோரின் சுமைகளை குறைக்கும் வகையில், நீண்டகால பயன்பாட்டுக்கான கட்டமைப்பு வசதி அத்தியாவசிமாகிறது. கடந்த நிதியாண்டில் (2021 - -22), 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது; இந்தாண்டிலும், வர்த்தகத்தை மேம்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும்.<br>இவ்வாறு, அவர் பேசினார்.

இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் பேசுகையில், ''ஏற்றுமதியாளர்கள், வட்டி விகிதம் உயர்வதால், பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, அவசரக்கடனுக்கான, உத்தரவாத கடன் திட்டத்தை, வரும் மார்ச் வரை நீட்டிக்க வேண்டும். 'ரெப்போ' வட்டி விகிதத்தில், வங்கிகள் மறு நிதியளிப்பு செய்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.

Published On : 11-12-2022

Source : Dina Malar

e-max.it: your social media marketing partner