Tags

திருப்பூர்:புற்று நோய் சிகிச்சை மையத்துக்கு நன்கொடை திரட்டும், 'வாக்கத்தான்' நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நன்கொடை வழங்கினர்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ மையம் அமைக்கப்படவுள்ளது. ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பில் இம்மையம், 'நமக்கு நாமே' திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் பணி பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வாயிலாக நடைபெற்று வருகிறது.இதில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு அமைப்புகள் இணைந்து வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இதன் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது. இதில், வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் பெருமளவில் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. குமார் நகர் சேரன் கார்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேரை இதில் பங்கேற்க வைக்க நிதி வழங்கப்பட்டது. சுப்பையா மெட்ரிக் பள்ளி சார்பில் 300 பேர் மற்றும் ஏ.வி.பி., பள்ளி சார்பில் 500 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நன்கொடை வழங்கல்:ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ)  தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன், பெஸ்ட் நிறுவனம் ராஜ்குமார், எஸ்.டி.,எக்ஸ்போர்ட்ஸ் ஆகியோர் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய், நிகழ்ச்சிக்கான நன்கொடையாக வழங்கப்பட்டது.<br><br>செல்வின் சின்னசாமி, எம்.பி.எம்., எக்ஸ்போர்ட்ஸ் ஆகியன சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் மற்றும் வி.சி., எக்ஸ்போர்ட்ஸ், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இதைப் பெற்றுக் கொண்டனர்.

Published On : 11-12-2022

Source : Dina Malar

e-max.it: your social media marketing partner