Tags

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு வாரந் தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது.

பனியன்  தொழிற் சங்கத்தினர், உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் சம்பளம் தொடர்பாக  பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்படி சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த ஒப்பந்தம்  முடி வடைந்த பிறகு, புதிய சம்பள உயர்வு தொடர்பாக  தொழிற்சங்கத்தினர், உற்பத்தி யாளர்கள் இடையே  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் சார்பில் சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், டீமா, நிட்மா, சிம்கா மற்றும் டெக்மா ஆகிய சங்கங்களும், தொழிற்சங்கங்கத்தினர் தரப்பில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எச்.எம்.எஸ்., ஏ.டி.பி., பி.எம்.எஸ்., மற்றும் ஐ.என்.டி.யு.சி., ஆகிய சங்கங்களும் பங்கேற்று பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.

கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி முதல் 7 சுற்று பேச்சுவார் த்தை நடந்தும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. தொழிற்சங்கங்கள் தரப்பில் தற்போதுள்ள சம்பளத்தை விட 90 சதவீதம் கூடுதல் ஊதியம், 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயரும் விலைவாசி புள்ளிக்கு 30 காசு பஞ்சப்படி என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

உற்பத்தியாளர்கள் தரப்பில் அடுத்த நான் காண்டுக்கு 28 சதவீதம் என்ற அளவு ஊதிய உயர்வு வழங்க தயாராக இருந்தனர். இதனால் 7 முறை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது. இதனால் பனியன் தொழிலாளர்கள்  கவலையடைந்தனர்.

இந்தநிலையில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை ‘சைமா’ கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் உற்பத்தியாளர்கள் தரப்பில், வரும் 2025ம் ஆண்டு வரை மொத்தம் 32 சதவீதம் சம்பள உயர்வு, ரூ.25 பயணப்படி, விலைவாசி உயர்வுக்கேற்ப 15 ஆயிரம் ரூபாய்க்கு 14.5 காசு பஞ்சப்படி வழங்க முன்வந்தனர்.

இதற்கு தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்ததால் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் இருதரப்பினரிடையே  உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Published On : 29-09-2021

Source : மாலைமலர்

e-max.it: your social media marketing partner