Tags

குஜராத் சதர்ன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரியை சேர்ந்த தொழில் துறையினர் 
தலைவர் அகர்வால் தலைமையில், "சிந்தடிக்' துணி உற்பத்தியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், கல்ாரி ஆராய்ச்சியாளர்கள் உள்பட, 11 பேர் அடங்கிய குழு, நேற்று திருப்பூர் வந்தனர். அவர்கள் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று பேசினர்..........

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார் , பொருளாளர் மோகன், EC மெம்பர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்

குஜராத் சதர்ன் சாம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரி தலைவர் அகர்வால் பேசியதாவது: குஜராத் அரசு உதவிகள் செய்வதால், செயற்கை நூலிழையான "சிந்தடிக்' மூலமாக, துணி உற்பத்தியும், ஆடை வடிவமைப்பும் அதிகம் நடக்கிறது. எனினும், திருப்பூரை போல், ஏற்றுமதி செய்ய இயலவில்லை. உள்நாட்டு வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 
2011ல், 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது; தற்போது, 26 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2020ல், ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளீர்கள். இதற்கு, எப்படி வியூகம் வகுக்கிறீர்கள்; திருப்பூரின் வழிகாட்டுதலை பெற்று, குஜராத்திலும் ஜவுளி ஏற்றுமதியை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசுகையில்,""திருப்பூர் பின்னலாடை தொழில், ஒரு வளாகத்தில் இயங்குவதில்லை. நிட்டிங், டையிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங் என, பல்வேறு தொழில்களை உள்ளடக்கியது. சங்கிலி தொடர்போல, ஒவ்வொரு தொழிம் பின்னி பினைந்துள்ளதால், பின்னலாடை வர்த்தகம் ஓங்கி வளர்ந்துள்ளது. ஒவ்வொருவரும், சொந்த முயற்சியில் தொழிலை வளர்த்து, ஒருங்கினைந்து ஏற்றுமதி செய்து வருகிறோம். தொழிலாளர்களின் அயராத உழைப்பால், வர்த்தகம் ஏறுமுகமாக உள்ளது,'' என்றார்.

e-max.it: your social media marketing partner